ஆத்தூரில் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது-படிக்கட்டில் நின்றவரைமேலே ஏற சொன்னதால் ஆத்திரம்
ஆத்தூரில் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆத்தூர்:
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் ஒன்று பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை பெரம்பலூர் மாவட்டம் எசனை பகுதியை சேர்ந்த தெய்வராஜ் (வயது 48) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் வீரகனூரில் இருந்து ஆத்தூர் நோக்கி ஆத்தூர் மந்தைவெளி நடு பெரியார் தெருவை சேர்ந்த மணிமாறன் என்பவரது மகன் சீனிவாசன் (22) என்ற கூலித்தொழிலாளி பயணம் ெசய்தார்.
அப்போது சீனிவாசன் படிக்கட்டில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அவரை பஸ்சின் மேலே வருமாறு டிரைவர் கூறி உள்ளார். பஸ் ஆத்தூர் லீ பஜார் பகுதிக்கு வந்தவுடன் பஸ்சில் இருந்து இறங்கிய சீனிவாசன் கற்களை எடுத்து வீசி பஸ்சின் பின்புற கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பஸ் டிரைவர் தெய்வராஜ் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.