மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய விவசாயி கைது


மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய விவசாயி கைது
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் முத்தம்பட்டி கிராமத்தில் கஞ்சா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முத்தம்பட்டி- கோவிந்தாபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சாக்குப்பையில் கட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்ததில் அவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வாரப்பள்ளம் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் (வயது 55) என்பது தெரியவந்தது. அவர் ½ கிலோ கஞ்சாவை சாக்குப்பையில் கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story