அரூர் அருகே போலீஸ் என கூறிமுதியவரிடம் நகை, பணம் திருடிய வாலிபர் கைது


அரூர் அருகே போலீஸ் என கூறிமுதியவரிடம் நகை, பணம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2022 6:45 PM GMT (Updated: 28 Dec 2022 6:46 PM GMT)
தர்மபுரி

அரூர்:

அரூர் அடுத்த சிக்களூர் அண்ணாநகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 73). இவர் கடந்த 19-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல்லில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், 3 கிராம் தங்க மோதிரம், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மொட்டுக்குரிய ஆவணம் ஆகியவற்றை ஒரு பையில் வைத்து மொபட்டில் திருவண்ணாமலை- நரிப்பள்ளி சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் மொபட்டை மறித்தார். இதையடுத்து வாலிபர் தான் சி.ஐ.டி. போலீஸ் என்றும், வாகனத்தின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என கூறினார். இதனை நம்பிய கந்தசாமி பணத்துடன் வைத்திருந்த பையை கொடுத்தார். பின்னர் அந்த வாலிபர் பையை கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து பெற்று செல்லுமாறு கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதையடுத்து கந்தசாமி கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று கேட்டபோது பையை வாங்கி சென்ற வாலிபர் போலீஸ் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கந்தசாமி கோட்டப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் போலீசார் தீர்த்தமலை குரும்பட்டி அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்களில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் அரூர் அருகே குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (வயது 18) என்பதும், அவர் கந்தசாமியிடம் போலீஸ் என கூறி பணம், நகையை ஏமாற்றி திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.97 ஆயிரம், திருடிய பணத்தில் வாங்கிய ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர்.


Next Story