பாலக்கோடு அருகேபெண் காதை அறுத்து நகைப்பறிப்பு; பூசாரி கைது


பாலக்கோடு அருகேபெண் காதை அறுத்து நகைப்பறிப்பு; பூசாரி கைது
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி கங்கப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 52). இவர் கடந்த 27-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ஜெயலட்சுமி அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் ரத்தக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்

அப்போது ஜெயலட்சுமியின் 2 காதுகளும் அறுக்கப்பட்டு அவர் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர் பறித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தியதில் பஞ்சப்பள்ளி அருகே உள்ள கூத்தப்பாடியை சேர்ந்த கோவில் பூசாரியான மாதன் (64) என்பவர் ஜெயலட்சுமியை தாக்கி நகை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாதனை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ஜெயலட்சுமி தனது கணவர் இறந்த பின்னர் மாதனுடன் கள்ளத்தொடர்பில் இருந்தாராம. இதையடுத்து ஜெயலட்சுமி வேறு இருவருடன் தொடர்பு வைத்து கொண்டதை அறிந்த மாதன் ஆத்திரம் அடைந்து ஜெயலட்சுமியை தாக்கியதில் அவர் இறந்து விட்டதாக கருதி 2 காதையும் அறுத்து நகையை பறித்து சென்றது தெரியவந்தது. பின்னர் மாதனை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story