அரூர் கோட்டத்தில் மது விற்ற 7 பேர் கைது- 723 மதுபாட்டில்கள், 4 வாகனங்கள் பறிமுதல்


அரூர் கோட்டத்தில் மது விற்ற 7 பேர் கைது- 723 மதுபாட்டில்கள், 4 வாகனங்கள் பறிமுதல்
x

அரூர் கோட்டத்தில் மது விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 723 மதுபாட்டில்கள் மற்றும் 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தர்மபுரி

அரூர்:

அரூர் கோட்டத்தில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், தலைமையில் குணசேகரன், பிரதாப், சரவணன், பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசார் அரூர், புதுப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அனுமதியின்றி மதுவிற்றதாக, காளி (வயது 50), மாது (65), ராஜா (62), வேலு (48), முருகன் (50), மோகன்ராஜி (24), செல்வகுமார் (35) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், மொபட், 2 ஸ்கூட்டர்கள் என 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து பதுக்கி வைத்திருந்த, 723 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story