திருச்செங்கோட்டில்கவர்னர் உருவபொம்மையை எரித்த ஆதித்தமிழர் கட்சியினர் கைது
நாமக்கல்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே நேற்று ஆதித்தமிழர் கட்சியினர் திரண்டு வந்தனர். சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலை கண்டித்தும், கவர்னருக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். இதையடுத்து திடீரென அவர்கள் கவர்னரின் உருவபொம்மைைய எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் உருவபொம்மையை அவர்களிடம் இருந்து பறித்து தீயை அணைத்தனர். இதையடுத்து உருவப்பொம்மையை எரித்ததாக மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாநில துணை பொதுச்செயலாளர் செல்வ வில்லாளன், மாநில தொண்டர் அணி செயலாளர் தமிழரசு, மாவட்ட தலைவர் சிவசங்கர், நகர செயலாளர் சரவணன் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story