சூளகிரி அருகேரூ.4 லட்சம் குட்கா கடத்திய 2 பேர் கைதுசரக்கு வேன் பறிமுதல்
சூளகிரி:
சூளகிரி அருகே ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.
குட்கா கடத்தல்
சூளகிரி போலீசார் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை கோபசந்திரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் சரக்கு வாகனத்தில் 635 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
வேன் பறிமுதல்
விசாரணையில் பெங்களூருவில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து குட்கா கடத்தியதாக பெங்களூருவை சேர்ந்த டிரைவர் அப்சல் (வயது 36), கே.ஜி.அள்ளியை சேர்ந்த கிளீனர் அப்துல் முஜித் (36) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.