பெண்ணை தாக்கிய தறித்தொழிலாளி கைது
நாமக்கல்
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் வயது 40. தறித்தொழிலாளி. சம்பவத்தன்று வடுகம்பாளையத்தை சேர்ந்த தறித்தொழிலாளி தனபால் (31) மற்றும் வெண்ணந்துறை சேர்ந்த மணி ஆகிய இருவரும் கணேசனை அழைத்து கொண்டு மல்லசமுத்திரம் அருகே உள்ள தாபா ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.
அப்போது ஓட்டலில் சாப்பிட்ட விட்டு கணேசன் சாப்பிட்டதற்கு மட்டும் பில் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே கணேசன் வீட்டுக்கு சென்ற தனபால் அங்கிருந்த கணேசனின் மனைவி லோகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து லோகேஸ்வரி வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்தனர்.
Related Tags :
Next Story