பரமத்திவேலூர் அருகேபணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது


பரமத்திவேலூர் அருகேபணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2023 7:00 PM GMT (Updated: 2023-02-14T00:30:54+05:30)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பகுதியில் உள்ள சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான பழைய கொட்டகையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய பொத்தனூரை சேர்ந்த ராமலிங்கம் (வயது 58), தியாகராஜன் (45), சிதம்பரம் (39), வரதராஜன் (30) கார்த்தி (30), சரவணன் (44), செல்வராஜ் (47), வாசு (40), வெங்கமேட்டை சேர்ந்த குமார் (45), சதீஷ்குமார், பாண்டமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீ சுதன் (35), ஆறுமுகம் (40), சோழசிராமணியை சேர்ந்த ராஜேந்திரன் (50), கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீநாத் (23), பாலப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (32), பார்த்திபன் (34) ஆகிய 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்து 600 மற்றும் 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story