பாப்பிரெட்டிப்பட்டியில்1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


பாப்பிரெட்டிப்பட்டியில்1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2023 7:00 PM GMT (Updated: 17 Feb 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிபட்டி:

பாப்பிரெட்டிப்பட்டியில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

ரோந்து பணி

பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பாப்பிரெட்டிப்பட்டி சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரணைநடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அவரை சோதனை செய்ததில் பாலீதின் பையில் 1 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

கைது

இதையடுத்து விசாரித்ததில் அவர் பாப்பிரெட்டிப்பட்டி வீரபத்திரன் கோவில் தெருவை சேர்ந்த கலையரசன் மகன் ராகவன் (வயது 24) என்பது தெரியவந்தது. பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ராகவனை கைது செய்தனர்.


Next Story