பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள பெரிய மதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய வீட்டின் அருகே உள்ள மரத்தின் கிளை உடைந்து வீட்டின் மீது விழுந்து அஸ்பெட்டாஸ் சீட் உடைந்தது. இதனால் மரத்தை கடந்த 7-ந் தேதி நாராயணப்பாவின மனைவி வெங்கடலட்சுமியம்மா (45) வெட்டினார்.. அப்போது வீட்டின் அருகே வசிக்கும் உறவினர்களான தொழிலாளி சுரேஷ் (33), சீனிவாசன் (34) ஆகியோர் எதற்காக மரத்தை வெட்டினாய் என கூறி வீட்டின் கதவை உடைத்து தொன்னையால் வெங்கடலட்சுமியம்மாவை தாக்கினார்களாம். இதையடுத்து அவர் தேன்கனிக்கோடடை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தளி போலீசில புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சுரேஷ், சீனிவாசன் மீது வழக்குப்பதிவு அதில் சுரேசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story