புதிய செருப்பில் இயற்கை உபாதையை கழித்த நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட வாலிபர் கைது


புதிய செருப்பில் இயற்கை உபாதையை கழித்த நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட வாலிபர் கைது
x

சென்னிமலை அருகே புதிய செருப்பில் இயற்கை உபாதையை கழித்த நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே புதிய செருப்பில் இயற்கை உபாதையை கழித்த நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

முகநூல் பதிவு

முகநூல் பக்கத்தில் கடந்த 9-ந் தேதி இறந்து கிடந்த நாயின் புகைப்படம் ஒன்றை ஒரு வாலிபர் பதிவிட்டு அதில் "தான் வாங்கி வெச்ச புது செருப்புல அடிக்கடி இயற்கை உபாதை கழித்து வந்ததால் போட்டு தள்ளிட்டேன்" என பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தன் நகரில் வசிக்கும் விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட நபர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

வாலிபர் கைது

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட நபர் தேனி மாவட்டம் பெரியகுளம் மங்களம் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் தினேஷ் (வயது 25) என்றும், இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தங்கியிருந்து கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலைக்கு சென்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தினேஷை தேடி சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.

இந்தநிலையில் நேற்று சென்னிமலை அருகே ஈங்கூர் நால்ரோடு பகுதியில் தினேஷ் நின்றுகொண்டு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தினேசை பிடித்து கைது செய்தனர்.


Related Tags :
Next Story