பெருந்துறையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது-ஒருவர் தப்பி ஓட்டம்


பெருந்துறையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது-ஒருவர் தப்பி ஓட்டம்
x

பெருந்துறையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவர் தப்பி ஓடினார்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவர் தப்பி ஓடினார்.

ரகசிய தகவல்

பெருந்துறை கொங்கு நகர் தாஷ்கண்ட் வீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கார்களில் ஏற்றிக் கொண்டு இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள்.

அங்கு சரக்கு ஆட்டோவில் இருந்து புகையிலை பொருட்களை 3 பேர் 2 கார்களில் ஏற்றிக்கொண்டு இருப்பது தெரிந்தது. உடனே போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்தார்கள். எனினும் அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

2 பேர் கைது

பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் பெருந்துறை தாஷ்கண்ட் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 31), விஜயமங்கலத்தை சேர்ந்த அழகேசன் (39) என்பதும், தப்பி ஓடியவர் பெருந்துறை கள்ளியம்புதூரை சேர்ந்த லட்சுமணன் (24) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து பெங்களூருவில் இருந்து 317 கிலோ எடைகொண்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து, பெருந்துறை பகுதியில் விற்பதற்காக கார்களில் ஏற்றிக்கொண்டு இருந்தது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் தினேஷ்குமார், அழகேசன் இருவரையும் கைது செய்தனர்.

2 கார்களையும், வேனையும் புகையிலை பொருட்களோடு பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லட்சுமணனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 820 என்று கூறப்படுகிறது.


Related Tags :
Next Story