ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது


ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாப்பிட சென்றவரை தாக்கியதாக ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

திருப்புல்லாணி அருகே உள்ள ரெகுநாதபுரம் மேலவலசை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றார். அவர் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஓட்டலில் இருந்தவர்கள் முருகனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் கும்பரம் முத்துக்குமார் (63), அவரின் மகன் தமிழரசு (19), தேவிபட்டினம் பழனிவலசை சசிக்குமார் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story