மொரப்பூரில்வாலிபரிடம் பணம் பறித்த 3 பேர் கைது
மொரப்பூர்:
அரூர் அருகே உள்ள அச்சல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் ராகுல் (வயது 28). இவர் நேற்று முன்தினம் அச்சல்வாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மொரப்பூர் வந்தார். அங்கு அண்ணல் நகரில் தனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ராஜா சட்டை பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து ராகுல் மொரப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி பணத்ைத பறித்து சென்றதாக மொரப்பூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த சாதிக் பாஷா மகன் சையத் காதர் (19), சாதிக் மகன் ஷாஜகான் (18) மற்றும் மொரப்பூர் மோட்டூர் பகுதி சேர்ந்த தமிழ்ராஜ் மகன் ரித்திக் (18) ஆகிய 3 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.