ஓசூர் அருகேநிலமோசடி வழக்கில் கணவன், மனைவி கைது


ஓசூர் அருகேநிலமோசடி வழக்கில் கணவன், மனைவி கைது
x
தினத்தந்தி 31 March 2023 12:30 AM IST (Updated: 31 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்திகிரி:

ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டி, முனி ரெட்டி ஆகியோரது 50 ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ராஜா ரெட்டி தனது மனைவி ரத்தினம்மாள் பெயரில் கடந்த 2006-ம் ஆண்டு நிலமோசடி செய்து அபகரித்ததாக கூறப்படுகிறது,

இதுகுறித்து சீனிவாச ரெட்டி மத்திகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஓசூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு ராஜா ரெட்டி, ரத்தினம்மாளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து கணவன், மனைவி தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி கணவன், மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தீர்ப்புக்கு பின் ராஜாரெட்டி, ரத்தினம்மாள் ஆகியோர் தலைமறைவாகினர்.

இவர்களை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் 2 பேரையும் மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி கைது செய்து ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதையடுத்து நீதிபதி விசாரணைக்கு பின்னர் ராஜா ரெட்டி, ரத்தினம்மாள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story