கிருஷ்ணகிரியில் துப்பாக்கி தோட்டாக்கள் மாயம்:புகார் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் கைது


கிருஷ்ணகிரியில் துப்பாக்கி தோட்டாக்கள் மாயம்:புகார் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 6 April 2023 12:30 AM IST (Updated: 6 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் துப்பாக்கியில் தோட்டாக்கள் மாயமானது தொடர்பாக புகார் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கி தோட்டாக்கள் மாயம்

கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராமமூர்த்தி. அங்கு போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் அபினேஷ்குமார் (வயது 36). இந்த நிலையில் அபினேஷ்குமார் பொறுப்பில் இருந்த 10 துப்பாக்கி தோட்டாக்கள் காணாமல் போனதாக தெரிகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, அபினேஷ்குமார் மீது புகார் அளித்தார்.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ராமமூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த அபினேஷ்குமார், ராமமூர்த்தியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மீண்டும் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அந்த புகார்களின்பேரில, அபினேஷ்குமார் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Next Story