நல்லம்பள்ளியில்போலி டாக்டர் கைது


நல்லம்பள்ளியில்போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 7 April 2023 12:30 AM IST (Updated: 7 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

போலி டாக்டர்

நல்லம்பள்ளியில் சிலர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் மாவட்ட நலப்பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் பாலாஜி தலைமையில், போலி டாக்டர்கள் ஒழிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நல்லம்பள்ளி வாணியர் தெருவில் உள்ள வீடு ஒன்றில் முருகேசன் (வயது 62) என்பவர், முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சை அளிக்க வைத்திருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைது

மேலும் முருகேசன் மீது அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story