விவசாயியை தாக்கியவர் கைது


விவசாயியை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 12 April 2023 12:30 AM IST (Updated: 12 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

சூளகிரி தாலுகா ஏனுசோனை அருகே உள்ள உல்லட்டி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா (வயது 52). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (53) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே சென்று கொண்டிருந்த பசப்பாவை, நாகராஜ் தகாத வார்த்தையால் திட்டி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த பசப்பா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் நாகராஜை கைது செய்தனர்.


Next Story