அரூர் அருகேவிவசாயி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
தர்மபுரி
அரூர் அருகே உள்ள எம்.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவனேசன் (வயது 28). விவசாயியான இவர் டிராக்டர் வைத்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவனேசன் இதுபற்றி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் (22) என்பவர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பூவரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story