கிருஷ்ணகிரியில்கஞ்சா வைத்திருந்த கேரள வாலிபர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கலால் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி குமார் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரள மாநில பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் வைத்திருந்த பையில் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 600 கிராம் கஞ்சா விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது, இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குட்டுக்கடவத்து கிராமத்தை சேர்ந்த நாதர்ஷா (24) என்பது தெரியவந்தது. பின்னர் மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் வாலிபரை போலீசார்கள் கைது செய்தனர்.
Related Tags :
Next Story