திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது


திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள அ.மெய்யனேந்தல், வாணி ஆகிய கிராமங்களில் கடந்த மாதங்களில் நகைகளை வீடு புகுந்து திருடிய வைரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி (வயது23), கீழ்க்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகநாதன் (26), வைரவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (26) ஆகியோரை இளையான்குடி இன்ஸ்பெக்டர் ராபர்ட் செயின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரூபன் மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சென்னையில் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 60 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள் களை கைப்பற்றி மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story