பொம்மிடி பகுதியில்சந்துக்கடையில் மது விற்ற 5 பேர் கைது


பொம்மிடி பகுதியில்சந்துக்கடையில் மது விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2023 7:00 PM GMT (Updated: 29 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி போலீஸ் எல்லைக்குட்பட்ட வடசந்தையூர், முத்தம்பட்டி, மஞ்சநாய்க்கன் தண்டா ஆகிய பகுதிகளில் அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமையில் பொம்மிடி போலீசார் நேற்று காலை சந்துக்கடையில் மது விற்பனை செய்வதை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வடசந்தையூர் பகுதியை சேர்ந்த சந்திரா (வயது 80), பையர்நத்தம் சதீஷ் (39), மோளகரடு பகுதியை சேர்ந்த சண்முகம் (75), மஞ்சநாய்க்கன்தண்டா பெருமாள் (60), மங்களங்கொட்டாய் சுகுனா (35) ஆகிய 5 பேரும் மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலை வைத்து சந்துக்கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 155 மது பாட்டில்களை பொம்மிடி போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story