கஞ்சா, குட்கா விற்ற 9 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சோதனையில் கஞ்சா வைத்திருந்ததாக காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெரு செல்வபாரதி (வயது 21), அங்கிநாயனப்பள்ளி ஏழுமலை (19), தேன்கனிக்கோட்டை கொண்டகானப்பள்ளி வேணுகோபால் (25), ஓசூர் காந்தி நகர் கவுதம் (20), ஓசூர் பேடரப்பள்ளி நாகநாதன் (23), தேன்கனிக்கோட்டை பஞ்சேஸ்வரம் அருகே உள்ள கொரட்டகிரி ரகு (21), கெலமங்கலம் ரோஷன் (34) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. காவேரிப்பட்டணத்தில் பெட்டி கடையில் குட்கா விற்ற மணிகண்டன் (35), பாகலூரில் பள்ளி அருகில் குட்கா விற்ற கங்காபுரம் ஜெயபால் (33) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story