பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2023 12:30 AM IST (Updated: 11 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே மாணிக்கம் புதூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மாணிக்கம் புதூர் கிராமத்தில் மறைவான ஒரு இடத்தில் 4 பேர் பணம் வைத்து சூதாடிய ஏலகிரி கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி (வயது 36), தண்டுக்காரம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (34), மாணிக்கம் புதூரைச் சேர்ந்த ஜெகநாதன் (25), மேல்பூரிக்கல் கிராமத்தை சேர்ந்த நந்தகோபால் (32) ஆகிய 4 பேரை தொப்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.550 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story