கோபிநாதம்பட்டி அருகேகஞ்சா விற்ற 2 பேர் கைது


கோபிநாதம்பட்டி அருகேகஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2023 12:30 AM IST (Updated: 11 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலகப்பாடி பாலம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குடுமியாம்பட்டியை சேர்ந்த தொழிலாளி அலெக்சாண்டர் (வயது 25), மலகப்பாடியை சேர்ந்த சூர்யதீபன் (25) என்பது தெரியவந்தது. சூரியதீபன் போட்டி தேர்வுக்கு படித்து வருவதும் தெரியவந்தது. இந்த 2 பேரும் கையில் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் பரிசோதித்தனர். அதில் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். கஞ்சாவை விற்பனைக்காக சிறு சிறு பொட்டலங்களாக கட்டி பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு கஞ்சா எங்கே இருந்து கிடைத்தது? என்பது குறித்தும், கஞ்சாவை கொண்டு வந்து கொடுத்தவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story