பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது
பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி பாண்டியன் நகரை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 68). இவர் வீட்டில் தனியாக இருக்கும்போது முகவரி கேட்பது போல் வந்த 2 வாலிபர்கள் கண்ணம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதேபோல் உ.சிறுவயல் பகுதியை சேர்ந்த கண்ணம்மை (72) கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணம்மை அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்த புகார்களின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த தமிழரசன் (24) பாலமுருகன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story