மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

பள்ளிபாளையம் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில் பள்ளிபாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 36), கவுதம் (32) என்பதும், அவர்கள் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பஸ் நிலைய ரோட்டில் சரவணன் (44) பையில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story