லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
சிவகங்கை
சிவகங்கை
இளையான்குடி நகர் பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜூக்கு புகார் வந்தன. இதைத்தொடர்ந்து இளையான்குடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இளையான்குடி சாலையூர் காமராஜர் சாலை தெருவில் அக்பர் அலி (வயது52) என்பவர் தன்னுடைய பெட்டிக்கடையில் திருச்சியை சேர்ந்த மணிகண்டன் (34) என்ற மொத்த லாட்டரி சீட்டு விற்பனையாளரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பெற்று அவற்றை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து லாட்டரி சீட்டு வியாபாரி மணிகண்டன் மற்றும் அக்பர் அலி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story