கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற 7 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2023 7:00 PM GMT (Updated: 2 Jun 2023 10:44 AM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் ஓசூர், பேரிகை, சூளகிரி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, தேன்கனிக்கோட்டை பகுதியில் லாட்டரி சீட்டக்களை விற்ற 7 பேரை கைது செய்த போலீசார் ரூ.2,100-ஐ பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஓசூர் சிப்காட்டில் குட்கா விற்பனை செய்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சென்னம்பேட்டையை சேர்ந்த முபாரக் (வயது36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story