மாணவியின் படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர் கைது
மாணவியின் படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் மாணவிக்கும், அறந்தாங்கியை சேர்ந்த விஜய் (வயது 21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது மாணவியை விஜய் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதையடுத்து மாணவியை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக தெரிகிறது. மேலும் மாணவியின் ஆபாச படங்களை இணையதளத்திலும் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.
Related Tags :
Next Story