பா.ஜனதா மண்டல தலைவர் உள்பட 2 பேர் கைது
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஓசூர் மாநகராட்சி சார்பில், 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல்' என்று பெயர் சூட்டி, விளையாட்டு மைதான நுழைவாசலில் பெயர் பலகை பொருத்தப்பட்டது. இதற்கு பா.ஜனதா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென பெயர் பலகையில் இருந்த கருணாநிதி பெயர், கருப்பு மை ஊற்றி அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஓசூர் தெற்கு மண்டல பா.ஜனதா தலைவர் கே.நாகு என்ற நாகேந்திரா (40) மற்றும் அலசநத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (40) ஆகிய 2 பேரை, ஓசூர் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story