மாடு திருடிய 3 பேர் கைது


மாடு திருடிய  3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்

சிவகங்கை

திருப்பத்தூர் அருகே உள்ள கம்பனூர் கிராமத்தில் காட்டுப்பகுதியில் இரவு நேரத்தில் வாகனத்தில் மாடுகளை ஏற்றிய வாலிபர்களை கிராமத்தினர் பிடித்து விசாரித்தனர்.. விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த வாலிபர்கள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் கலைவாணி தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அந்த வாலிபர்கள் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த மாதவராஜ்(19) மற்றும் 2 பேர் என தெரிய வந்தது. இவர்களை போலீசாா் கைது செய்தனர். மேலும் அவர்கள் வாகனத்தில் ஏற்றியபோது சம்பவ இடத்திலேயே ஒரு மாடு இறந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story