திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடையில் தகராறு; 5 வாலிபர்கள் கைது


திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடையில் தகராறு; 5 வாலிபர்கள் கைது
x
நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே கருவேப்பம்பட்டி பகுதியை சேர்ந்த குகன் (வயது27), யோகேஷ் (26), அருண் பாண்டியன் (25), மைதீன் (25), ஆரிப் (26) கூலித் தொழிலாளர்களான இவர்கள் 5 பேரும் தேவனாங்குறிச்சி அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது தேவனாங்குறிச்சி பகுதியை சேர்ந்த கவுதம், கார்த்திக் ஆகியோரும் மது குடிக்க வந்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் கருவேப்பம்பட்டி பகுதியை சேர்ந்த 5 பேரும், கவுதம், கார்த்திக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் 2 பேரும் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் குகன், யோகேஷ், அருண்பாண்டியன், மைதீன், ஆரிப் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


Next Story