ஓசூரில் வீட்டை வாடகைக்கு எடுத்து வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம்- 3 புரோக்கர்கள் கைது
ஓசூர்
வாடகை வீட்டில் விபசாரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள என்.ஜி.ஜி.ஓ.எஸ். காலனியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் வருகின்றனர். மேலும் அந்த வீட்டில் இளம்பெண்கள் பலர் உள்ளனர். தொடர்ந்து காரில் தினமும் இளம்பெண்களை சிலர் அழைத்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
3 புரோக்கர்கள் கைது
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சபரிவேலன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் விரைந்து சென்று அந்த வீட்டை சோதனை செய்தனர். இதில் வெளி மாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அந்த வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் தேன்கனிக்கோட்டை அஞ்சலகிரியை சேர்ந்த சின்னபிட்டப்பா மகன் சீனிவாஸ் (வயது25), கிருஷ்ணகிரி பாரதிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் திருப்பதி (32), பெங்களூரு பண்டேபாளையா சின்னசாமி லேஅவுட்டை சேர்ந்த முனுசாமி என்கிற முனி (48) என்பதும், வீட்டை வாடகைக்கு எடுத்து வடமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்ததும் தெரிந்தது. இதையடுத்து புரோக்கர்களான அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.