கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 9 பேர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அந்த வகையில் ஊத்தங்கரை, சாமல்பட்டி, கல்லாவி, மத்தூர், சிங்காரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் குட்கா விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பெத்தனப்பள்ளி சீனிவாசன் (வயது 23), மத்திகிரி ஜஸ்டின் (50), ஓசூர் ராயக்கோட்டை சாலை ஸ்ரீகாந்த் (36) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story