மதுவிற்ற 2 பேர் கைது46 மது பாட்டில்கள் பறிமுதல்


மதுவிற்ற 2 பேர் கைது46 மது பாட்டில்கள் பறிமுதல்
x
நாமக்கல்

பரமத்திவேலூர்

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அரசு டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் சிவகங்கை மாவட்டம், அங்காளகோட்டையை சேர்ந்த சின்னசாமி மகன் ரகுபதிராஜா (வயது 25) என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் மோகனூர் பகுதியில் களத்தனமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசாா் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது வளையப்பட்டி அடுத்த அருர் ஏரி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், அரூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான விஸ்வநாதன் (41) என்பதும், அரசு மதுபாட்டில்களை அதிக விற்பனை செய்ததும் தெரிந்தது. பின்னர் போலீசார், விஸ்வநாதன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து 21 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story