பெண்ணை தாக்கிய 2 பேர் கைது


பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2023 1:00 AM IST (Updated: 23 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த ஏ.சின்ன பெல்லாரம்பள்ளியை சேர்ந்தவர் சுமா (வயது 35). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நஞ்சுண்டன் (39). உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்சினை இருந்து வந்த நிலையில் கடந்த 19-ந் தேதி நஞ்சுண்டன், சுமா வீட்டின் முன் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்துள்ளார். இதுகுறித்து கேட்ட சுமாவை, நஞ்சுண்டன், வடிவேல் (51) உள்ளிட்ட 4 பேர் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து நஞ்சுண்டன், வடிவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story