போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் பாண்டியன் நகரில் வசிப்பவர் ஜெயபாண்டி. இவரது மனைவி தற்கொலை தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது விருதுநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சண்முகசுந்தரம் இந்த வழக்கை விசாரித்து வந்தார். கோர்ட்டில் வழக்கு விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை. எனவே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத சண்முகசுந்தரத்திற்கு மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story