பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்ததை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 71). கடந்த 14.4.2015 அன்று வீட்டில் இருந்த இவரிடம், இவரது சகோதரர்கள் வெங்கடேசன், செல்வராஜ், செல்வம் ஆகிய 3 பேரும் சேர்ந்து வீட்டை காலி செய்யுமாறு கேட்டுள்ளனர். அதற்கு பரமசிவம், நிலம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது, காலி செய்ய இயலாது என்றும், தீர்ப்பு வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து, பரசிவத்தை தாக்கியுள்ளனர். அப்போது தகராறை விலக்க வந்த தில்லை வள்ளாலன், ஆதிமூலம் ஆகியோரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பரமசிவம் அளித்த புகாரின்பேரில், அப்போது குவாகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த கலா, கொலை முயிற்சி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தார். தற்போது இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்கு ஜெயங்கொண்டம் குற்றவியியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டது. 11 சாட்சிகளில் 10 சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் கலா ஆஜராகாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் வருகிற 6.3.2023 அன்று இறுதி விசாரணை நடைபெறவுள்ளதால், கலாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகாலட்சுமி உத்தரவிட்டார்.