சேலத்தில்செல்போன் கடையில் திருடிய 4 வாலிபர்கள் கைது


சேலத்தில்செல்போன் கடையில் திருடிய 4 வாலிபர்கள் கைது
x
சேலம்

சூரமங்கலம்

சேலத்தில் கடையில் செல்போன்களை திருடிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

செல்போன் கடை

சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள ஜாகீர் ரெட்டிப்பட்டி இண்டேன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 27) இவர் காசக்காரனூரில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 18-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது கடை ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 3 செல்போன்கள் திருட்டு போய் இருந்தன. இதுகுறித்து அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

4 பேர் கைது

விசாரணையில் செல்போன் கடையில் திருடியது ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (19), சசிகுமார் (20), முகமது ஷாருக்கான் (19), தென்னரசு (19) ஆகிய 4 பேர் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவா்களிடம் இருந்து திருட்டு போன 3 செல்போன்கள் மீட்கப்பட்டன.


Next Story