பழனி பஸ் நிலையத்தில் செல்போன் கவர் விற்றவரை தாக்கிய வியாபாரி கைது


பழனி பஸ் நிலையத்தில் செல்போன் கவர் விற்றவரை தாக்கிய வியாபாரி கைது
x

பழனி பஸ் நிலையத்தில் செல்போன் கவர் விற்றவரை தாக்கிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

பழனி பகுதியில் இன்று வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆனது. அந்த வீடியோவில், பழனி பஸ்நிலைய நடைமேடையில் செல்போன் கவர் விற்கும் நபரை, ஒருவர் தாக்கி மிரட்டுவது போன்று பதிவாகி இருந்தது. இதையடுத்து செல்போன் கவர் விற்றவரை தாக்கும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

அதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வீடியோ குறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க பழனி போலீசுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வீடியோ குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், மதுரையை சேர்ந்த அய்யாவு மகன் ராஜன் (வயது 40) என்பவர் பழனி பகுதியில் தங்கி செல்போன் கவர்களை விற்று வருகிறார்.

அதன்படி, ராஜன் செல்போன் கவர் விற்றபோது, பஸ்நிலையத்தில் செல்போன் உதிரி பொருட்கள் கடை வைத்துள்ள பழனியை சேர்ந்த சுதர்சன் (29) என்பவர் ராஜனிடம், வெளியூரில் இருந்து இங்கு வந்து நீங்கள் செல்போன் கவர் விற்றால், கடை வைத்துள்ள எங்களுக்கு வியாபாரம் பாதிக்கும் என கூறி, இனி இங்கே உன்னை பார்க்க கூடாது என கூறி, ராஜனின் கன்னத்தில் அறைந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து ராஜன் அளித்த புகாரின்பேரில், சுதர்சனை பழனி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story