தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் கைது


தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:32+05:30)

காவேரிப்பட்டணம் அருகே வீட்டில் பார் நடத்திய தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 1,221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே வீட்டில் பார் நடத்திய தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 1,221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பார் அமைத்து மது விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள வேலம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி காவேரிப்பட்டணம் பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலாக இருந்து வருகிறார். இவர்களது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்து.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் நாகரசம்பட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜா வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

கவுன்சிலரின் கணவர் கைது

இதுகுறித்து போலீசார் ராஜா மற்றும் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ராஜா வேலம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து பார் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

மேலும் வீட்டில் இருந்த 1,221 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் வீட்டில் பார் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story