தலைமறைவாக இருந்தவர் கைது


தலைமறைவாக இருந்தவர் கைது
x

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்கும் பணி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் வேணுகோபால், கோவிந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் காலமாக தலைமறைவாக இருந்த திருப்பத்தூர் மாவட்டம் வேப்பல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜியை போலீசார் கைது செய்து தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.


Next Story