மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்றவர் கைது
தா.பழூரில் மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்றவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சாலையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற அங்கராயநல்லூரை சேர்ந்த அபினாஷ் (வயது 23) என்பவர் 22 மது பாட்டில்களை விற்பனைக்காக எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அபினாசை கைது செய்தனர். இதேபோல் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் தேவாமங்கலம் பஞ்சநாதன் (80) என்பவரது வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது பஞ்சநாதன் வீட்டில் இல்லாததால் அவரை கைது செய்ய முடியவில்லை. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story