கஞ்சா வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா வழக்கில் கைதான  2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

குலசேகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 வாலிபர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 வாலிபர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை

குலசேகரன்பட்டினம் டாஸ்மாக் கடை அருகே கடந்த மாதம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்றுக் கொண்டிருந்த உடன்குடி புதுமனை கோட்டைவிளை பகுதியைச் சேர்ந்த செல்வமுத்து மகன் முத்துராஜ் (எ) சியான் (வயது 26), உடன்குடி கொத்துவா பள்ளி தெருவைச் சேர்ந்த செரிப் மகன் சாகுல்ஹமீது (எ) அமீர் (26) ஆகிய 2 பேரை குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த 2 பேரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில், அந்த 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து சியான், அமீது ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது ெசய்ததற்கான ஆவணங்களை குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஒப்படைத்தார். இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 33 பேர் உட்பட 136 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.


Next Story