திருட்டு வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம்


திருட்டு வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம்
x

திருட்டு வழக்கில் கைதானவர் தப்பி ஓடினார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் வெங்கடேஷ். இவருடைய மோட்டார் சைக்கிளை திருடியது தொடர்பாக திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த நிஷார் அகமது (வயது40) என்பவரை தியாகதுருகம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீசாரிடம் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிவிட்டு கோர்ட்டு வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு நிஷார் அகமது சென்றார்.. இவர் சென்று நீண்டநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து கழிப்பறைக்கு சென்று போலீசார் பார்த்தபோது, அங்கு அவர் இல்லை. போலீசாரை ஏமாற்றிட்டு நிஷார் அகமது அங்கிருந்து தப்பிச்சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும் அந்தந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு பஸ் இருந்து மற்றொரு பஸ்சில் ஏறி வெளியூர் தப்பிச்செல்ல முயன்ற நிஷார் அகமதுவை சங்கராபுரம் போலீசார் மடக்கி பிடித்து தியாகதுருகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து நிஷார் அகமது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story