2,640 டன் அரிசி நெல்லை வருகை
ஆந்திராவில் இருந்து 2,640 டன் அரிசி நெல்லை வந்துள்ளது.
திருநெல்வேலி
நெல்லைக்கு வெளிமாநிலங்களில் இருந்து அவ்வப்போது அரிசி, உரம், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. அதே போல் விவசாயத்திற்கு தேவையான உரங்களும் நெல்லைக்கு கொண்டு வரப்படுகின்றன.
அதன்படி நேற்று காலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு 2 ஆயிரத்து 640 டன் அரிசி கொண்டு வரப்பட்டது. 42 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட அரிசியை லாரிகள் மூலம் ஏற்றி சிவந்திபட்டி அருகே உள்ள முத்தூர் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இருப்பு வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story