நெல்லை ரெயில் நிலையத்திற்கு 2,700 மெட்ரிக் டன் யூரியா வருகை


நெல்லை ரெயில் நிலையத்திற்கு 2,700 மெட்ரிக் டன் யூரியா வருகை
x

நெல்லை ரெயில் நிலையத்திற்கு 2,700 மெட்ரிக் டன் யூரியா வந்தது.

திருநெல்வேலி

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு உரங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் சென்னை மணலியில் இருந்து 1,450 டன் யூரியா ரெயில் மூலம் நெல்லை வந்தது. இதேபோல் தூத்துக்குடியில் இருந்தும் 1,250 டன் யூரியா நெல்லை வந்தது. இவை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,300 மெட்ரிக் டன் உரம் நெல்லை வந்து சேர்ந்தது. இதேபோல் நெல்லை மாவட்டத்திற்கு தேவையான அரிசி நேற்று முன்தினம் வெளிமாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் நெல்லை சந்திப்பு நிலையத்திற்கு வந்து இறங்கியது. இந்த அரிசி மூட்டைகள் வாணிப கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story