தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புகுடும்பத்துடன் தீக்குளிப்பு முயன்ற விவசாயிபோலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புகுடும்பத்துடன் தீக்குளிப்பு முயன்ற விவசாயிபோலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை
x
தினத்தந்தி 14 Aug 2023 1:00 AM IST (Updated: 14 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர்கள் திடீரென பையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ஏக்கர் நிலம் மற்றும் அதில் கட்டப்பட்ட வீடு ஆகியவை புறம்போக்கு என்று கூறி புதிய சாலை அமைக்க அளவீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story